|
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சர் : இந்திய பொருளாதாரத்தின் துடிப்பான தன்மை மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் கிடைத்தல் போன்றவை, வரி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன ; வர்த்தக வசதிகள் மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்கும் துல்லிய கண்டுபிடிப்புகள் இரண்டும் சுங்க நிர்வாகத்தின் முன் முக்கிய சவால்களாக விளங்குகின்றன ; 2018 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச சுங்க தினம் 2018 புதுடெல்லி வித்யா பவனில் இன்று நடைபெற்றது
प्रविष्टि तिथि:
27 JAN 2018 3:44PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.அருண் ஜேட்லி பேசுகையில், இந்திய பொருளாதாரத்தின் துடிப்பான தன்மை மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் கிடைத்தல் போன்றவை, வரி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வர்த்தக வசதிகள் மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்கும் துல்லிய கண்டுபிடிப்புகள் இரண்டும் சுங்க நிர்வாகத்தின் முன் முக்கிய சவால்களாக விளங்குகின்றன. இந்த இரண்டு நடவடிக்கைகளையும் சமாளிக்க அனுபவம் வாய்ந்த வரித் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
இன்று புதுடெல்லி விக்யான் பவனில் சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் & வாரியத்தின் (சி.பி.இ.சி.) மத்திய கலால் மற்றும் சுங்க மூத்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில், பட்டமளிப்பு விழா 2018 மற்றும் சர்வதேச சுங்க தினம் 2018 கொண்டாட்டத்தில் மத்திய நிதித் துறை அமைச்சர் திரு.ஜேட்லி உரையாற்றினார். இந்திய வர்த்தகத்தின் தரவரிசை எல்லை தாண்டி வளர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை சி.பி.இ.சி. மேற்கொள்ளும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். சுங்கத் துறைக்கு ஐஸ்டிராக் மற்றும் ஐஸ்டாப் எனப்படும் இரண்டு புதிய தொழில்நுட்பத்தை மத்திய நிதித் துறை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அனுப்பப்படும் வணிகப் பொருட்களைக் கண்காணிக்கவும், தேவையான தகவல்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் பெற்றுக்கொள்ளவும் முடியும். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் திரு. சிவ் பிரதாப் சுக்லா பேசுகையில், ஜி.எஸ்.டி. அறிமுகத்தில் சுங்கத்துறை குறுகிய காலத்தில் சாதனை படைத்தது, குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் நமது எல்லைப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக வசதிகளை சிறப்புற செய்துகொடுத்ததை பாராட்டினார். நிதித் துறை செயலாளர் திரு.ஹஸ்முக் ஆதியா, ஜி.எஸ்.டி.யை சுலபமாக நடைமுறைக்குக் கொண்டுவந்தது மற்றும் புதிய தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நமது நாட்டின் வர்த்தகத் தரவரிசை எல்லை தாண்டி முன்னேற வேண்டும் என்றால், தொழில்நுட்பத்தில் தேவையான மாற்றங்கள் கொண்டுவருதல் மற்றும் புதிய தொழில்நுட்பம் அமல் படுத்துதல் அவசியம் என்று தெரிவித்தார். சி.பி.இ.சி.-யின் சுங்க உறுப்பினர் திரு.பி.கே.தாஸ், வர்த்தக வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய பிற பிரதிநிதிகளின் பங்கினை மேம்படுத்த வேண்டும் என்று பேசினார். சுங்கத் தலைமை ஆணையர் திரு.சுனில் குமார் சாஹ்னி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சர்வதேச சுங்க தினம் சிபிஇசி சார்பில் கொண்டாடப்பட்டது. தலைமை விருந்தினராக மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜேட்லி கலந்துகொண்டார், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு.சிவ் பிரதாப் சுக்லா கெளரவ விருந்தினராக பங்கேற்றார். நிதித் துறை செயலாளர் டாக்டர் .ஹஸ்முக் ஆதியா, இந்திய அரசின் சிறப்புச் செயலாளர் மற்றும் (சி.பி.இ.சி.) தலைவர் திருமதி. வனஜா என் சாமா மற்றும் சி.பி.இ.சி. உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், இந்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விழாவில் குடியரசுத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் உலக சுங்க அமைப்பான டபிள்யூ.சி.ஓ. சான்றிதழ் விருதுகளும் தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்கும், சி.பி.இ.சி. ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டன.
விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய சி.பி.இ.சி. தலைவர் திருமதி.வனஜா என்.சாமா, சமீபத்தில் வர்த்தக முன்னேற்றத்திற்கு சுங்கத் துறையில் எடுக்கப்பட்டுள்ள முக்கியமான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் உலக வர்த்தக அமைப்புடன், வர்த்தக உதவி ஒப்பந்தம் உருவாக்கி இந்தியாவில் நடைமுறைப்படுத்தும் திட்டங்களால் வர்த்தகம் எளிதாகவும், அதிக அளவும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
சுங்கப் பிரிவில் பணியாற்றும் 40 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, சிறந்த முறையில் சேவை புரிந்து சாதனை படைத்ததற்காக குடியரசுத் தலைவர் பாராட்டு சான்றிதழ், வழங்கப்பட்டது. தங்கள் துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அசாதாரண செயல்திறனுடன் செயல்படும் அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் தடுப்பு, வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு, வர்த்தக பண மோசடி கண்டறிதல், அந்நியச் செலவாணி மீறல், வரிக் கொள்கை உருவாக்கத்தில் பங்களிப்பு, வருமானம் திரட்டல், வணிகத்தில் தானியங்கி செயல்பாடு மற்றும் தகுதி வளர்த்துக்கொண்டு பிறருக்கு வழிகாட்டுதல் போன்ற பிரிவுகளில் இருந்தும் இந்த ஆண்டு விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.இ.சி-யைச் சேர்ந்த கீழ்க்கண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளனர்.
தலைமை ஆணையர் / ஆணையர்
- திரு.சத்ய நாராயண் சகா, முதன்மைக் கூடுதல் தலைமை இயக்குனர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.சி.இ.ஐ.), ஹைதராபாத் மண்டலப் பிரிவு.
- திரு.சையத் ஹைதர் ஹாசன், பிரின்சிபிள் கமிஷனர், சென்ட்ரல் எக்சைஸ் மண்டலம், மீரட்.
- திரு.ஶ்ரீனிவாஸ் மூர்த்தி டாடா, ஆணையர் (சர்வீஸ் டேக்ஸ்) சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ், புதுடெல்லி.
- திரு.சுனில் ஜெயின், ஆணையர், சென்ட்ரல் எக்சைஸ் ஆணையர், ஹைதராபாத்.
இயக்குனர்கள்/கூடுதல் இயக்குனர்கள்.கூடுதல் ஆணையர் /இணை ஆணையர்கள்
- திரு.ராஜேந்திர குமார், இயக்குனர் (சட்டம்), சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ், புதுடெல்லி
- திரு.நீரஜ் பிரசாத் கூடுதல் கமிஷனர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் டேக்ஸ் பேயர் சர்வீசஸ், புதுடெல்லி.
- திரு.மனீஷ் கோயல், கூடுதல் இயக்குனர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ஹுமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் (டி.ஜி. ஹெச்.ஆர்.டி.), புது டெல்லி.
- திரு.நாஸிம் ஆர்ஷி, கூடுதல் இயக்குனர், ரிஸ்க் மேனேஜ்மென்ட் டிவிஷன் (ஆர்.எம்.டி.) மும்பை.
- டாக்டர் எம்.ஜி.தமிழ் வளவன், இயக்குனர் (கடத்தல் தடுப்பு) சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ், புதுடெல்லி
- திரு.தினேஷ் குமார் குப்தா, இயக்குனர் (டிராபேக்), சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ், புதுடெல்லி
- திரு.மிஹிர் ரஞ்சன், கூடுதல் கமிஷனர், டைரக்டர் ஜெனரல் ஆஃப் விஜிலென்ஸ், நியூடெல்லி.
- திரு.நிதின் சைனி, கூடுதல் இயக்குனர், டைரக்டர் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.சி.இ.ஐ.), ரீஜனல் யூனிட், லூதியானா.
- திரு.சுபையர் ரியாஸ் காம்லி, இயக்குனர் (கஸ்டம்ஸ்), சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ், புதுடெல்லி
- திரு.மனீஷ் குமார், கூடுதல் இயக்குனர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.ஆர்.ஐ.), ஸோனல் யூனிட், அஹமதாபாத்.
- டாக்டர் பிரத்யும்ன் குமார் திரிபாதி, முதல்நிலை செயலாளர், ஹை கமிஷன் ஆஃப் இந்தியா, சிங்கப்பூர்.
- திரு.பிரமோத் குமார், ஆபிஸர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி (இணை கமிஷனர்), டேக்ஸ் ரிசர்ச் யூனிட் (டி.ஆர்.யு.), சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ், புதுடெல்லி.
- திரு.சஞ்சீவ் குமார் மிஸ்ரா, இணை கமிஷனர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சிஸ்டம்ஸ் அண்ட் டேட்டா மேனேஜ்மென்ட், புதுடெல்லி.
துணை கமிஷனர்கள்/உதவி கமிஷனர்கள்
- திரு.சந்தர்பால் சிங் சவுகான், துணை கமிஷனர், கஸ்டம்ஸ் ஸோன், மும்பை-2.
- மிஸ் சம்ரிதா கெளர் கில், துணை இயக்குனர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.ஆர்.ஐ.), (ஹெச்.க்யூ.ஆர்.எஸ்.), புது டெல்லி.
- திரு.அவினாஷ் சசிகாந்த் படானே, உதவி கமிஷனர், சென்ட்ரல் எக்சைஸ் ஸோன், புனே, சூப்பரின்டென்டன்ட்ஸ்/சீனியர் இன்டெலிஜென்ட்ஸ் ஆஃபிசர்ஸ்.
- திரு.சிவ் குமார் சர்மா, சீனியர் இன்டெலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியேட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ், (டி.ஜி.ஆர்.ஐ.) ஸோனல் யூனிட், டெல்லி.
- திரு.கே.ராமச்சந்திரன், சூப்பரின்டென்டன்ட், சென்ட்ரல் எக்சைஸ் ஸோன், சென்னை.
- திரு.டி.வெங்கடேஸ்வரன், சீனியர் இன்டெலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.சி.இ.ஐ.) (ஹெச்.க்யூ.ஆர்.எஸ்.), புதுடெல்லி.
- திரு.புரோபிர் குமார் சென், சூப்பரின்டென்ட், கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் ஸோன், சில்லாங்.
- திரு.அஸால் மெஹ்ரோட்ரா, சீனியர் இன்டலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.சி.இ.ஐ.) (ஹெச்.ஜி.ஆர்.எஸ்.) புதுடெல்லி.
- திரு.பி.நாகபூஷணம், சூப்பரின்டென்ட், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.சி.இ.ஐ.), ஸோன் யூனிட், பெங்களூரு.
- திரு.பிரமோத் மரோட்ராவ் டாங்கே, சீனியர் இன்டெலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.ஆர்.எல்.) ஸோன் யூனிட், மும்பை.
- திரு.அஷ்வானி குமார் கபூர், சீனியர் இன்டெலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜென்ட்ஸ், (டி.ஜி.சி.இ.ஐ.) ரீஜனல் யூனிட், லூதியானா.
- திரு.பால்தேவ் பிரசாத் காந்துரி, சூப்பரின்டென்ட், சென்ட்ரல் எக்சைஸ் ஸோன், மீரட்.
- திரு.மோகன் ராகவன், சீனியர் இன்டெலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.ஆர்.ஐ.), ஸோனல் யூனிட், மும்பை.
- திரு.ராஜேஷ் ராம்தாஸ் சாலியன், சூப்பரின்டென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் டிவிஷன் (ஆர்.எம்.டி.) மும்பை,
- மிஸ்.சீமா, சூப்பரின்டென்ட், டைரக்டோரியட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ், புது டெல்லி.
- திரு.மகேஷ் குமார் புரோகித், அப்ரைசர், கஸ்டம்ஸ் ஸோன், மும்பை-3.
- திரு.ராஜ்னீஷ் குப்தா, கூடுதல் உதவி இயக்குனர் (சூப்பரின்டென்ட்) டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ஹூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் (டி.ஜி.ஹெச்.ஆர்.டி.), புதுடெல்லி.
அமைச்சரவை அதிகாரிகள்
- மிஸ்.கீதா மோகன் மேனன், சீனியர் பிரைவேட் செகரட்டரி டூ சீஃப் கமிஷனர் ஆஃப் கஸ்டம்ஸ் ஸோன், மும்பை-1.
- திரு.ஏ.ஜி.ராஜன், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிடென்ட்ஸ் (டி.ஜி.சி.இ.ஐ.), ஸோனல் யூனிட், சென்னை.
கண்காணிப்பாளர்கள்/இன்டெலிஜென்ட்ஸ் அதிகாரிகள்
- திரு.ரவி தத் சங்கர், இன்டெலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் (டி.ஜி.சி.இ.ஐ.), ஸோனல் யூனிட், டெல்லி.
- திரு.மமிதி நர்சிங் ராவ், இன்டெலிஜென்ட்ஸ் ஆபிஸர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.ஆர்.ஐ.), ஸோனல் யூனிட், ஹைதராபாத்.
ஓட்டுனர்
- திரு.ரன்பீர் சிங், டிரைவர் கிரேடு 1, டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் ரெவின்யூ இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.ஆர்.ஐ.)(ஹெச்.க்யூ.ஆர்.எஸ்.) புது டெல்லி.
தலைமை காவலர்
- திரு.லக்ஷ்மண் சிங் நேகி, தலைமை காவலர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜென்ட்ஸ் (டி.ஜி.சி.இ.ஐ.) (ஹெச்.க்யூ.ஆர்.எஸ்.).
இவர்களைத் தவிர கீழ்க்கண்ட 20 அதிகாரிகளுக்கு, உலக சுங்க அமைப்பு ஆய்வுக்கு பங்களிப்பு செய்தவகையில், உலக சுங்க அமைப்பின் தகுதிச் சான்றிதழ் பெற்றனர். இந்த விருது 17 சுங்கத் துறை அதிகாரிகளுக்கும், ஒரு கடலோர காவல்படை அதிகாரிக்கும் இரண்டு தனியார் துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது.
சி.பி.இ.சி. அதிகாரிகள்.
- திரு.விவேக் ரஞ்சன், ஏ.டி.ஜி., டைரக்டோரியேட் ஜெனரல் டேக்ஸ் பேயர் சர்வீசஸ், சி.பி.இ.சி., புதுடெல்லி.
- திரு.ஹர்தீப் பத்ரா, கூடுதல் கமிஷனர், டபிள்யூ.சி.ஓ.செல், டிஜி சேஃப்ஹார்ட்ஸ், புதுடெல்லி.
- திரு.விஷ்ணுகுமார், இணை கமிஷனர், கஸ்டம்ஸ், (பிரிவென்டிவ்) புவனேஸ்வர்.
- மிஸ்.டெம்சுனரோ ஜமீர், இணை கமிஷனர் (ஐ.சி.டி.), ஐ.சி.டி. செக்ஷன், சி.பி.இ.சி. புதுடெல்லி.
- திரு.அலோக் குமார், இணை இயக்குனர், ஆர்.எம்.டி. டி.ஜி.ஆர்.ஏ.எம். மும்பை.
- திரு.மனோஜ் குமார், இணை இயக்குனர், நாசின், ஃபரிதாபாத்,
- மிஸ்.கே.கே.சுஜா, இணை கமிஷனர், கஸ்டம்ஸ், சென்னை.
- திரு.வி.சுரேஷ், இணை இயக்குனர், சி.ஆர்.சி.எல்., சென்னை.
- திரு.கவ்ரவ் சான்டா, துணை கமிஷனர், சிங்கிள் விண்டோ புராஜெக்ட், சி.பி.இ.சி., புதுடெல்லி.
- டாக்டர் காந்தி டான்தி, துணை கமிஷனர், டைரக்டோரியட் ஜெனரல் ஆஃப் விஜிலென்ஸ் (ஹெச்.ஆர்.எஸ்.), புதுடெல்லி.
- திரு.பிரியங் சதுர்வேதி, துணை இயக்குனர், டி.ஜி.சிஸ்டம்ஸ், புதுடெல்லி.
- திரு.அனில் குமார் சப்ரா, ஓ.எஸ்.டி.பி.ஏ.சி. கஸ்டம்ஸ் விங், சி.பி.இ.சி. புதுடெல்லி.
- திரு.பி.எஸ்.கிரிவல், உதவி இயக்குனர், டைரக்டோரியட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ், புதுடெல்லி.
- டாக்டர் எஸ்.எல்.ஶ்ரீபார்வதி, அன்டர் செக்ரட்டரி, சர்வீஸ் ராக்ஸ், சி.பி.இ.சி. புதுடெல்லி.
- திரு.ஹரீஸ் குமார், உதவி கமிஷனர், சி.சி.சி.யூனிட், டெல்லி கஸ்டம்ஸ், புதுடெல்லி.
- திரு.சஞ்சய் குமார், எஸ்.ஐ.ஓ., டி.ஆர்.ஐ.டி.இசட்.யூ., சி.பி.இ.சி. புதுடெல்லி.
- திரு.ஓளக்கெங்கில் ஃபிரான்சிஸ் ஜோஸ், இன்ஸ்பெக்டர் (பி.ஓ.) கஸ்டம்ஸ் ஹவுஸ், கொச்சின்.
மற்ற அரசு நிறுவனத்திலிருந்து விருது பெற்ற அதிகாரி
- திரு.கே.நடராஜன், கூடுதல் இயக்குனர் ஜெனரல், கோஸ்ட் கார்டு கமான்டர் (வெஸ்டர்ன் சீபோர்டு), மும்பை, இந்திய கடலோர காவல் படை..
தனியார் துறையில் இருந்து பெற்றவர்கள்.
- திரு.சமீர் ஜெ.ஷா, ஜேபி.எஸ்.குரூப் ஆஃப் கம்பெனிஸ் பங்குதாரர், அஹ்மதாபாத்.
- திருவாளர்கள் கெர்ரி இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஐ.சி.டி.) சென்னை.
(रिलीज़ आईडी: 1518918)
|