சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
2017-18 நிதி ஆண்டில் ரூ. 1,22,000 கோடி மதிப்பிலான 7,400 கி.மீ. சாலைத் திட்டங்களுக்கு அனுமதி – தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாதனை
प्रविष्टि तिथि:
31 MAR 2018 6:18PM by PIB Chennai
2017-18 நிதி ஆண்டில் ரூ. 1,22,000 கோடி மதிப்பிலான 7,400 கி.மீ. நீளமுள்ள 152 சாலைத் திட்டங்களுக்கு அனுமதியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சராசரியாக 2,860 கி.மீ. சாலைகளுக்கு அனுமதி ஆணை வழங்கி வந்தது. சென்ற நிதியாண்டில் 4,335 கி.மீ. நீள சாலை அமைப்புப் பணிக்கு அது அனுமதி வழங்கியது. ஒப்பிட்டுப் பார்க்கையில் 2017-18 நிதியாண்டில் வழங்கப்பட்ட சாலைத் திட்டப் பணிகளின் நீளம் முன் எப்போதும் இல்லாத உயர் அளவு ஆகும். 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாதனை அளவும் இது ஆகும்.
பாரத் மாலா என்ற மாபெரும் திட்டம் அனுமதிக்கப்பட்ட பிறகு சாலைத் திட்டங்களுக்கான ஏல மற்றும் ஆணை வழங்குதல் நடைமுறை வேகம் அதிகரித்தது. 2017 நவம்பர் முதல் அனுமதி வழங்குவதற்கான புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த புதிய நடைமுறையின்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய வாரியத்திற்கு இ.பி.சி. எனப்படும் பொறியியல் கொள்முதல் கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனுமதி வழங்குவதற்கென உயர் அதிகாரம் கொண்ட திட்ட மதிப்பீடு குழு மற்றும் செலவினக் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைக் காணவும்.
(रिलीज़ आईडी: 1527404)
आगंतुक पटल : 301
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English