சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஒரு நாடு – ஒரு வரி, ஒரு நாடு - ஒரு பெர்மிட் குறித்து போக்குவரத்து சார்ந்த அமைச்சர்கள் குழு விவாதித்தது.
Posted On:
19 APR 2018 6:58PM by PIB Chennai
பேருந்துகள் , டாக்சிகள் ஆகியவற்றுக்குச் சீரான சாலைவரி மற்றும் தேசிய பெர்மிட்டுகளுக்குப் பரிந்துரை செய்தது
சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் போக்குவரத்து சார்ந்த அமைச்சர்கள் குழு, பேருந்துகள் , டாக்சிகள் ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களுக்குமான சீரான சாலைவரி மற்றும் தேசிய பெர்மிட்டுகளுக்குப் பரிந்துரை செய்தது. குவஹாத்தியில் இன்று( 19.04.2018) நடைபெற்ற இந்தக் குழுவின் கூட்டத்தில், ஒரே சீரான வரி அமைப்பு இருந்தால் வாகனங்கள் குறைந்த வரி விதிக்கும் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு, இதர மாநிலங்களில் இயக்கப்படும் நிலை கட்டுப்படுத்தப்படும் என்று கருத்து தெரிவித்தது. மேலும், இதனால் வாகனங்களை மாற்றுவதற்கான உண்மையான நிகழ்வுகளுக்கு உரிய நிவாரணமும் கிடைக்கும்.
ராஜஸ்தான் மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு யூனுஸ்கானைத் தலைவராகவும் மாநிலப் போக்குவரத்து அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ள இந்தக் குழுவில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்வகையிலான முடிவுகள் ஏற்கப்படுகின்றன. ஒரு நாடு – ஒரு வரி, ஒரு நாடு - ஒரு பெர்மிட் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
தேசியப் பேருந்து, டாக்சி பெர்மிட்டுகளைச் சரக்கு போக்குவரத்து பெர்மிட்டுகளைப் போல அமைத்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது. நாட்டில் பொதுத்துறைப் போக்குவரத்து சுமார் இரண்டு சதவீத அளவிலும், தனியார்ப் போக்குவரத்து இருபது சதவீத அளவிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
வாகனங்களுக்கு மாற்றுஎரிபொருளை மேம்படுத்துவது குறித்த விஷயத்தில் மின்சார வாகனங்களுக்கு பெர்மிட் வழங்கும் நடைமுறையில் தாராளமயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
-----
(Release ID: 1529723)
Visitor Counter : 205