குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கால வரம்பில்லாத மாண்புகளைக் கொண்ட மகத்தான பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் என்ற அதிர்ஷ்டம் இந்திய சமூகத்திற்கு உள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் இந்திய சமூக வரவேற்பில் உரை

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2018 11:14AM by PIB Chennai

கால வரம்பில்லாத மாண்புகளைக் கொண்ட மகத்தான பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் என்ற அதிர்ஷ்டம் கவுதமாலாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு இருப்பதாக  குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார். குடியரசுத் துணைத் தலைவரை கௌரவித்து கவுதமாலாவுக்கான இந்தியத் தூதர் திரு.சஜீவ் பாபு குரூப் அளித்த இந்திய சமூகத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் இன்று (08.05.2018) உரையாற்றினார். பழங்குடி மக்கள் நலத்துறை இணையமைச்சர் திரு.ஜஸ்வந்த்சிங் பபோர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் பரவியிருப்பதாகவும், அவர்கள் வாழும் நாடுகளுக்கு மட்டுமின்றி உலகத்திற்கும் பங்களிப்பு செய்துக் கொண்டிருப்பதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். உலகின் எந்தப் பகுதியிலும் அவர்கள் வாழலாம், எந்தப் பணியையும் செய்யலாம். ஆனால் மகத்தான நமது தேசத்தின் தூதர்களாக செயல்பட்டு உலகம் மற்றும் அந்தந்த நாட்டின் கலாச்சார தலைநகரத்திற்கும், செயல்களுக்கும் கூடுதல் சிறப்பு சேர்க்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். வாய்மை, அறம், அன்பு, அமைதி, கொல்லாமை, தன்னலமிலாப் பணி போன்ற மாண்புகளை அவர்களில் பலர் பின்பற்றுவதால் இந்திய வம்சாவளியினர் பரவலான மதிப்பைப் பெறுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் சிறந்த வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான சீர்த்திருத்தங்களின் காலம் வந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் சமவாய்ப்பு, எட்ட முடியாத வரையும் எட்டுதல், வங்கி வசதி இல்லாதவருக்கும் வங்கி வசதி அளித்தல், நிதி இல்லாதவருக்கும் நிதி வழங்குதல் என்பவை காலத்தின் தேவை என்று அவர் கூறினார்.

நல்ல, கவனத்திற்குரிய, பகிர்ந்து கொள்கிற இந்தியர்களாகவும், மிக உயர்வான ஞானம் நிறைந்த உலகக் குடிமக்களாகவும் வாழ்க்கையை நிரப்புவதற்கும் இந்தியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்வதற்கும் குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அமைதி, அனைவரையும் அரவணைத்தல், சகவாழ்வு, இணக்கம் ஆகியவற்றை தனிநபர்களாகவும், சமூகமாகவும் நிலையாக வளர்த்து  மேம்படுத்துவது உலகத்திற்கு இந்தியாவின் செய்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1531601) வருகையாளர் எண்ணிக்கை : 148
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi