ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவ முறை துறையில் இந்தியா மற்றும் கொலம்பியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
16 MAY 2018 3:41PM by PIB Chennai
இந்திய பாரம்பரிய மருத்துவ துறையை அமைக்க ஒத்துழைப்பு வழங்க இந்தியா மற்றும் கொலம்பியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது உள்ளது. கொலம்பியாவில் இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறையையை ஊக்குவிக்கவும் பரப்பவும் இது உதவும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால், பாரம்பரிய மருத்துவ முறையில் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க நிபுணர்கள் பரிமாற்றம் மற்றும் விரிவான ஆய்வு நடத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். இதனால், மருந்து தொடர்பான வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ நடைமுறை பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Release ID: 1532493)