நீர்வளத் துறை அமைச்சகம்
91 பெரும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 4 சதவீதம் உயர்வு
Posted On:
07 SEP 2018 10:28AM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள 91 பெரிய நீர்த்தேக்கங்களில் செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் நீர் இருப்பு 119.042 பி.சி.எம்.ஆக உள்ளது. இது மொத்த நீர்த்தேக்க திறனில் 73 சதவீதமாக இருப்பதுடன், ஆகஸ்ட் 30ம் தேதி இருந்த இருப்புடன் ஒப்பிடுகையில் இருந்த 69 சதவீதத்தை விட 4 சதவீதம் கூடுதலாகும். செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உள்ள நீர் இருப்பின் அளவு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 130 சதவீதம் மற்றும் கடந்த 10 ஆண்டுகள் இருந்த நீர் அள்வின் சராசரியை விட 114 சதவீதம் கூடுதலாகும்.
இந்த 91 நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்புத் திறன் 161.993 பி.சி.எம். ஆகும். இது நாட்டில் உருவாக்கப்பட்ட நீர் இருப்புத் திறனான 257.812 பி.சி.எம். உடன் ஒப்பிடுகையில் 63 சதவீதமாகும். இந்த 91 நீர்த்தேக்கங்களில் 37 நீர்த்தேக்கங்களிம் நீர்மின்சார பயன் 60 மெகாவாட் ஆகும்.
தென்பிராந்தியம்
தென்பிராந்தியத்தில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா மற்றும் தெலங்கானா (இரு மாநிலங்களின் இணைந்த திட்டம்), கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் அடங்கும். இங்கு மொத்தம் 31 நீர்த்தேக்கங்கள் இருப்பதுடன் இவற்றிம் மொத்த நீர் சேமிப்பு திறன் 51.59 பி.சி.எம். ஆகும். இந்த நீர்த்தேக்கங்களில் தற்போது 42.53 பி.சி.எம். நீர் இருப்பதுடன் இது மொத்த திறனில் 82 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 38 சதவீத அளவுக்கும் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 62 சதவீத அள்வுக்கும் நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டு மற்றும் கடந்த 10 ஆண்டுகால சராசரியை விட இந்த ஆண்டு நீர் இருப்பு கூடுதலாக உள்ளது.
ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு சிறப்பாக உள்ளது. பஞ்சாப், இமாச்சல், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் குஜராத்தில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு குறைவாக உள்ளது.
****
(Release ID: 1545298)