நீர்வளத் துறை அமைச்சகம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது
13 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் நவம்பர் 30, 2018
Posted On:
13 SEP 2018 2:15PM by PIB Chennai
இந்தியாவில் நீர் வள மேலாண்மையின் முக்கியத்துவத்தைக் கருதி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு ஆகியவை தேசிய நீர் விருதுகளை அறிவித்துள்ளது. நீர்வளங்களை திறமையாகவும் அதனைக் குறித்த விழிப்புணர்வை நாட்டில் ஏற்படுத்துவதற்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
2018-ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுக்கான விண்ணப்பங்கள் 13 பிரிவுகளில் வரவேற்கப்படுகின்றன. அவை பின்வருமாறு: சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம பஞ்சாயத்து, சிறந்த நகராட்சி, நீர் சேமிப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியை பயன்படுத்தும் அமைப்பு, சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு, சிறந்த தொலைக்காட்சி பார்வை, சிறந்த நாளிதழ், சிறந்த பள்ளி, சிறந்த கல்வி நிறுவனம், சிறந்த குடியிருப்பு நல்வாழ்வு சங்கம், சிறந்த மத / பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நீர் பயன்பாடு, சிறந்த தொழில்துறை நீர்சேமிப்பு அமைப்புகள். சிறந்த மாநிலம், மற்றும் சிறந்த மாவட்ட விருதுகளை தவிர ரொக்கப்பரிசுகளாக ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம், மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளாக இதர 11 பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பத்திற்கும், விண்ணப்பதாரர்கள் http://mowr.gov.in/national-water-awards-2018 and cgwb.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
----
(Release ID: 1546036)