நீர்வளத் துறை அமைச்சகம்
அணைகள் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கான திருந்திய மதிப்பீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
19 SEP 2018 1:26PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அணைகள் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை, ரூ.3466 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் 198 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான திருத்திய மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரூ. 3466 கோடியில், உலக வங்கி ரூ.2628 கோடியையும், இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள்/அமைப்புகள் ரூ.747 கோடியையும், எஞ்சிய ரூ.91 கோடி மத்திய நீர்வள ஆணையத்தாலும் வழங்கப்படும்.
இத்திட்டத்தை 2018 ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை 2 ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கவும் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவரம் :
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை முழுமையாக சீரமைக்க இத்திட்டம் வகை செய்யும்.
சீரமைக்கப்பட உள்ள அணைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பீட்டுத் தொகை வருமாறு:-
திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பு
|
அணைகளின் எண்ணிக்கை
|
திட்டத்திற்கான மொத்த தொடக்க செலவினம் (ரூ.கோடியில்)
|
திருந்திய மொத்த செலவினம் (ரூ.கோடியில்)
|
தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறை
|
69
|
486
|
543
|
டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்)
|
20
|
260
|
260
|
(Release ID: 1546682)