மத்திய அமைச்சரவை
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை திருத்தம் செய்யும் இரண்டாவது நெறிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
03 OCT 2018 6:57PM by PIB Chennai
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை திருத்தம் செய் வதற்கு ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட இரண்டாவது நெறிமுறைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்கனவே ஆகஸ்ட் 24, 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.
பலன்கள்:
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தக உறவினை இரண்டாவது நெறிமுறை வலுப்படுத்தும். விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் பயன்பாட்டை மேம்படுத்தவும் இது உதவும்.Top of Form
(रिलीज़ आईडी: 1548448)
आगंतुक पटल : 111