வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இந்தூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி
இந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுற்றுப்பாதை (பெங்காலி சதுக்கம்-விஜய் நகர்- பாவர்சாலா- விமானநிலையம்-பட்டாசியா-பெங்காலி சதுக்கம்)
Posted On:
03 OCT 2018 6:59PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில்போக்குவரத்துத் திட்டம் பெங்காலி சதுக்கம்-விஜய் நகர்- பாவர்சாலா- விமானநிலையம்- பட்டாசியா-பெங்காலி சதுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுப்பாதையின் நீளம் 31.55 கி.மீ. ஆகும். இந்தூரில் முக்கிய பொது இடங்களையும், நகரின் நெருக்கமான பகுதிகளையும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைக்கும்.
விவரம்
சுற்றுப்பாதையின் நீளம் 31.55கி.மீ. ஆகும். இங்கு அமையும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 30. இந்தத் திட்டத்திற்கான மதிப்பீட்டு செலவு ரூ.7,500.80 கோடி ஆகும். இந்தத் திட்டம் 4 ஆண்டுகளில் நிறைவுபெறும்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்தியப் பிரதேச மெட்ரோ ரயில் நிறுவனம் என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது.
இந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஒரு பகுதியும், மத்திய பிரதேச அரசு ஒரு பகுதியும் சமஅளவில் ஏற்கும். ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நியு டெவலப்மென்ட் வங்கி ஆகியவற்றிடமிருந்து ஒரு பகுதி கடனாக பெறப்படும்.
மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் இந்தத் திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயன்பெறும். இந்தூரில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் மூலம் பயணிகள் சென்றுவரமுடியும்.
*********
(Release ID: 1548476)