நீர்வளத் துறை அமைச்சகம்

நாட்டின் 91 பெரிய அணைகளில் நீர் அளவு ஒரு சதவீதம் குறைந்தது

Posted On: 05 OCT 2018 10:40AM by PIB Chennai

நாட்டில் உள்ள 91 பெரிய அணைக்கட்டுகளில் அக்டோபர் 4ம் தேதி வரையான வார இறுதியில் மொத்தம் 12092.10 கோடி கன மீட்டர் (120.921 பிசிஎம்) நீர் உள்ளது. இது அனைத்து அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவில் 75 சதவீதம் ஆகும். ஆனால், கடந்த செப்டம்பர் 27ம் தேதி வரையில் இந்த அணைக்கட்டுகளில் 76 சதவீதம் அளவுக்கு நீர் இருந்தது.

அதே சமயம், இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு இருந்த நீரை ஒப்பிடும்போது, 113 சதவீதம் நீர் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நீர் இருப்பின் சராசரி அளவில் இது 104 சதவீதம் ஆகும்.

91 அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவு 16199.3 கோடி கன மீட்டர் ஆகும். இது நாட்டின் அனைத்து அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவில் 63 சதவீதம் ஆகும். நாடு முழுவதும் உள்ள அனைத்து அணைக்கட்டுகளிலும் அமைக்கப்பட்ட மொத்த கொள்ளளவு 25781.2 கோடி கன மீட்டர் ஆகும்.  91 பெரிய அணைக்கட்டுகளில் 37 அணைக்கட்டுகள் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இவற்றின் மூலம் மொத்தம் 60 மெகாவட் மின்சாரம் கிடைக்கிறது.

 

தெற்கு மண்டலத்தில்..

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைக் கொண்ட தென்மண்டலத்தில் மொத்தம் 31 அணைகள் மத்திய நீர்வள ஆணையத்தின் (CWC) கீழ் வருகின்றன. இவற்றின் மொத்த கொள்ளவு 5159 கோடி கன மீட்டர் ஆகும். இவற்றில் உள்ள நீர் அளவு 3732 கோடி கன மீட்டர். இது மொத்த கொள்ளளவில் 72 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் மொத்த கொள்ளளவில் 55 சதவீத நீர்தான் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 68 சதவீதம் நீரின் அளவு இருந்தது.

நாடு முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் கடந்த ஆண்டை விட திருப்திகரமாக நீர் அளவு உள்ளது. ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், திரிபுரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் குறைவான நீரே உள்ளது.

 

******


(Release ID: 1548703)
Read this release in: English , Urdu , Hindi , Marathi