நீர்வளத் துறை அமைச்சகம்
நாட்டின் 91 பெரிய நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு நிலை ஒரு சதவீதம் குறைந்தது
Posted On:
26 OCT 2018 11:04AM by PIB Chennai
நாட்டின் 91 பெரிய நீர்த்தேக்கங்களில் 25.10.2018-ல் முடிவடைந்த வாரத்தில் தண்ணீர் 112.67 பில்லியன் கன மீட்டராக (பிசிஎம்) இருந்தது. இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் இது 70 சதவீதம் ஆகும். 18.10.2018-ல் முடிவடைந்த வாரத்தில் மொத்த தண்ணீர் இருப்பு சதவீதம் 71-ஆக இருந்தது. சென்ற ஆண்டு இதே காலத்தில் இந்த நீர்த்தேக்கங்களில் இருந்த தண்ணீரின் அளவை விட தற்போதைய இருப்பு 101 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் சராசரி தண்ணீரின் அளவை ஒப்பிடுகையில் இது 100 சதவீதமாகும். இந்த 91 பெரிய நீர்த்தேக்கங்களில் 37-ல் மொத்தம் 60 மெகாவாட்டுக்கும் கூடுதலான நீர் மின்சக்தி பயன்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தென் மண்டலத்தில் தண்ணீர் இருப்பு நிலைமை
நாட்டின் தென் மண்டலத்தில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா (இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான இரண்டு திட்டங்கள்,) கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியன அடங்கியுள்ளன. இந்த மண்டலத்தில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ள 31 பெரிய நீர்த் தேக்கங்களில் மொத்த கொள்ளளவு திறன் 51.59 பிசிஎம் ஆகும். இந்த நீர்த்தேக்கங்களில் தற்போது உள்ள மொத்த நீரின் அளவு 33.98 பிசிஎம். இது மொத்த கொள்ளளவில் 66 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த நீரின் அளவுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இருப்பு 66 சதவீதமாகும். இதே போல கடந்த பத்தாண்டுகளின் சராசரி தண்ணீர் இருப்புடன் ஒப்பிடுகையில் தற்போதைய தென்மண்டல நீர் இருப்பு 66 சதவீதமாகும். அதாவது நடப்பு ஆண்டில் தண்ணீர் இருப்பு சென்ற ஆண்டு தண்ணீர் இருப்புக்கும் கடந்த பத்தாண்டுகளின் சராசரி தண்ணீர் இருப்புக்கும் சம நிலையில் உள்ளது. தென் மண்டலத்தில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் சென்ற ஆண்டு தண்ணீர் இருப்பு நிலையை விட தற்போதைய இருப்பு சிறப்பாக உள்ளது.
******
(Release ID: 1550931)