மத்திய அமைச்சரவை

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பழங்குடிகளுக்கான மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2009-ம் ஆண்டின் மத்திய பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 08 NOV 2018 8:35PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பழங்குடிகளுக்கான மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான ஒப்புதலை வழங்கியது. 2014-ம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச சீரமைப்பு சட்டத்தின்  13 வது பிரிவின் கீழ் விஜயநகரம் மாவட்டத்தில்  உள்ள ரெல்லி கிராமத்தில் “ஆந்திரப் பிரதேச  பழங்குடிகள் மத்திய பல்கலைக்கழகம்” நிறுவப்படும். இந்த பழங்குடிகளுக்கான மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முதல் கட்ட செலவுகளுக்காக ரூ. 420 கோடியை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

**********


(रिलीज़ आईडी: 1552234) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Assamese , Telugu , Kannada , Malayalam