பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசு பங்குகளை 100 சதவீதம் கைவிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2018 8:30PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய பொருளாதார விஷயங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் பங்குகளை 100% விசாகப்பட்டினம் துறைமுக நிறுவனம், பாரதீப் துறைமுக அறக்கட்டளை, ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை மற்றும் கண்ட்லா துறைமுக அறக்கட்டளை ஆகிய நான்கு நிறுவனங்கள் அடங்கிய கூட்டணிக்கு விற்க கொள்கையளவிலான தனது ஒப்புதலை வழங்கியது.
தற்போது ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 73.44 சதவீத பங்குகளை இந்திய அரசு வைத்துள்ளது. இந்த நிறுவனம் கடலில் இருந்து மணல் எடுக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் இதர நிறுவனங்கள் மணல் அள்ளும் வகையில் துறைமுகங்கள் தங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கவும் இந்த ஒப்புதல் வழிவகுக்கும். இந்த நிறுவனமும் துறைமுகங்களும் வசதிகளைப் பகிர்ந்து கொள்வதென்பது துறைமுகங்களுக்கு சேமிப்பு ஏற்படுத்துவதாக இருக்கும். இத்தகைய சேமிப்பு இந்த நிறுவனத்தில் இவை மேலும் அதிகமாக முதலீடு செய்யவும் வழிவகுக்கும்.
இந்த பங்கு பரிமாற்றத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் உதவியுடன் இந்த இரண்டு அமைப்புகளும் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்ட பிறகு இந்த பரிமாற்றம் நடைபெறும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1552247)
வருகையாளர் எண்ணிக்கை : 139