மத்திய அமைச்சரவை
இந்தியா-தஜகிஸ்தான் இடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைக்க வகை செய்யும் புர்ந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2018 1:34PM by PIB Chennai
இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில், இந்தியா-தஜகிஸ்தான் இடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைக்க வகை செய்யும் புர்ந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தஜகிஸ்தான் தலைநகர் Dushanbe-யில் கையெழுத்தானது. இந்திய தரப்பில் தஜகிஸ்தானுக்கான இந்திய தூதர் திரு. சோமநாத் கோஷ் மற்றும் தஜகிஸ்தான் குடியரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு விவகாரங்கள் குழு தலைவரான திரு. அப்துல்லாசோடா ஆடாம்ரஸ்தம் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
இந்த ஒப்பந்தப்படி, இளைஞர்கள் பரிமாற்றம், இளையோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பரிமாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்படும். இளையோர் விவகாரம் தொடர்பான சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகளில் இருநாட்டு இளையோர்களும் பங்கேற்கவும் ஒப்பந்தம் வகை செய்கிறது. இளையோர் விழாக்களும் மேற்கொள்ளப்படும். இவை அனைத்தும் இருநாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, இருநாடுகளின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படும்.
பயன்
இந்த ஒப்பந்தம் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரம், நன்மதிப்பு மற்றும் நல்ல சிந்தனைகள் போன்றவைகளை பரிமாறிக் கொள்ள வழியேற்படும். இதுபோன்ற நடவடிக்கைகளினால், இருநாடுகளைச் சேர்ந்த இளையோர்கள் மத, இன, பாலினப் பாகுபாடின்றி இளையோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.
*****
ஈஎம்/க.
(வெளியீட்டு அடையாள எண்: 1553490)
வருகையாளர் எண்ணிக்கை : 139