நீர்வளத் துறை அமைச்சகம்

நாட்டின் 91 பெரிய நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு நிலை 2 சதவீதம் குறைந்தது

Posted On: 07 DEC 2018 10:43AM by PIB Chennai

நாட்டின் 91 பெரிய நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு நிலவரம் 2018 டிசம்பர் 6ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 94.994 பிசிஎம்-ஆக இருந்தது. இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் இது  59 சதவீதமாகும். 2018 நவம்பர் 29ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் இது 61 சதவீதமாக இருந்தது.  சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த இந்த நீர்த் தேக்கங்கள் மொத்த கொள்ளளவில் 2018 டிசம்பர் 6ல் முடிவடைந்த வாரத்தின் கொள்ளளவு  98 சதவீதமாகும். பத்தாண்டுகள் சராசரி கொள்ளளவில் இது 94 சதவீதமாகும்.

 

நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள மொத்த நீர் சேமிப்பு திறனான 257.812 பிசிஎம் அளவுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்த 91 நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 161.993 பிசிஎம் என்பது 63 சதவீத அளவை குறிப்பதாகும். இந்த 91 நீரத் தேக்கங்களில் 37ல் மொத்தம் 60 மெகாவாட்டுக்கும் கூடுதலான நீர்மின்சக்தி திட்டப்பயன்கள் இணைந்துள்ளன.

 

தெற்கு மண்டலம்

 

தெற்கு மண்டலத்தில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, ஏபி மற்றும் டிஜி (இரண்டு மாநிலங்களிலும் இணைந்த இரண்டு திட்டங்கள்) கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை உள்ளன. இந்த மண்டலத்தில் 51.59 பிசிஎம் மொத்த சேமிப்பு திறன் கொண்ட மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ள 31 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றில் தற்போது மொத்த தண்ணீர் இருப்பு 26 புள்ளி 93 பிசிஎம் ஆகும். இது இவற்றின் மொத்த கொள்ளளவு திறனில் 52 சதவீதமாகும். சென்ற ஆண்டு இதே காலத்தில் இந்த நீர்த் தேக்கங்களில் இருந்த தண்ணீரின் அளவில் தற்போதைய இருப்பு 55 சதவீதமாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த நீர்த் தேக்கங்களில் இருந்த தண்ணீர் அளவின் சராசரியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நீர் இருப்பு 59 சதவீதமாகும். இந்த வகையில் பார்த்தால் சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட தற்போதைய இருப்பு குறைவானது. அதே போல கடந்த 10 ஆண்டுகளில் சராசரி இருப்புடன் ஒப்பிடுகையில் தற்போதைய இருப்பு குறைவானதாகும்.

 

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக நீர் இருப்பு பெற்றுள்ள மாநிலங்கள் வருமாறு : இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நீர் இருப்பு நிலவரம் குறைந்துள்ள மாநிலங்கள் வருமாறு : ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஏபி மற்றும் டிஜி, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா.

 

 

---------

 

 

சிஜே/கோ


(Release ID: 1555293)
Read this release in: English , Urdu , Hindi , Marathi