நீர்வளத் துறை அமைச்சகம்
நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு மொஹாலியில் நாளை தொடங்குகிறது
Posted On:
09 DEC 2018 5:09PM by PIB Chennai
மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை ஆதரவுடன், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம், மொஹாலியில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளி வளாகத்தில் 2018 டிசம்பர் 10-11 முதலாவது சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘நீடித்த நீர் மேலாண்மை’ என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாகும். ஒருங்கிணைந்த, நீடித்த வளர்ச்சி மற்றும் நீர்வள மேலாண்மையை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
10.12.2018 அன்று நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் ஆச்சாரியா தேவ்விரத், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை செயலாளர் திரு. யூ.பி.சிங், கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து, கொரியா, கனடா, ஜெர்மனி, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரசித்தி பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான நிபுணர்களும், பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்று, நீர்வளங்களுக்கான நீடித்த மேம்பாடு தொடர்பான அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
*****
எம்எம்/உமா
(Release ID: 1555303)