ஆயுஷ்
நடப்பாண்டு சாதனைகள்: ஆயுஷ் அமைச்சகம்
Posted On:
19 DEC 2018 11:58AM by PIB Chennai
2018 ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை கொண்ட யுக்திகளின் மூலம் மத்திய ஆயுஷ் அமைச்சகம், மாற்று மருத்துவ முறைகளான குறிப்பாக ஆயுர்வேதத்தையும், ஓமியோபதியையும் இந்தியாவின் பொது சுகாதார கட்டமைப்புக்குள் கொண்டு வந்துள்ளது.
சீர்திருத்த நடவடிக்கைகள்
2018 ஆம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதியன்று ஓமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) அவசர சட்டம் 2018 மத்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது.
மத்திய நிறுவனங்கள் அமைப்பு
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி அன்று ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு. ஸ்ரீபாக் எஸ்.ஓ. நாயக் டெல்லியில் உள்ள நரேலாவில் 259.12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவிருக்கும் ஓமியோபதிக்கான தேசிய நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதே வருடத்தில் சரிதா விஹாரில் 209.33 கோடி ரூபாய் செலவில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும் தொடங்கப்பட்டது.
முனைப்பு இயக்கமாக யோகா
சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் வகையில் நாடெங்கிலும் நடந்த யோகா தின கொண்டாட்டங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் மைய அமைச்சகமாக விளங்கியது. உத்தரகண்ட் மாநிலம் டெராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியோடு சுமார் 50 ஆயிரம் பேர் யோகா செயல் முறை விளக்கத்தில் பங்கேற்றனர்.
பிரதமரின் யோகா விருதுகள்
சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி பிரதம மந்திரியின் யோகா விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் வருடந்தோறும் யோகா துறையின் வளர்ச்சிக்கான சிறந்த பங்களிப்பிற்கு வழங்கப்படுகின்றன.
தேசிய அளவிலான நிகழ்வுகள்
2018 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான முன்னோட்டமாக தன்னாட்சி அமைப்பான மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சர்வதேச யோகா விழாவிற்கு மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஏற்பாடு செய்திருந்தது. 2018 மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பிரபல யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்ற யோகா விழாவிற்கு முந்தைய பயிலரங்குகள் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையங்களிலும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற்றன.
கோவா மாநிலம் பனாஜியில் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த “பொது சுகாதாரத்திற்கான சர்வதேச யோகா மாநாடு” நடைபெற்றது. இம்மாநாட்டில் 11 நாடுகளைச் சேர்ந்த 20 யோகா நிபுணர்கள் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 600 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
தேசிய மருத்துவ தாவர மையம்
ஆயுஷ் மருந்துகளுக்கான மூலப் பொருட்களை வழங்கும் மருத்துவ தாவரங்களின் பராமரிப்புக்கென தேசிய மருத்துவ தாவர வாரியம், “பராமரிப்பு வளர்ச்சி மற்றும் மருத்துவ தாவரங்களின் மேலாண்மைக்கான மத்திய திட்டத்தின்” கீழ் வனப்பகுதிகளிலும், விளை நிலங்களிலும் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதற்கு தேசிய ஆயுஷ் முனைப்பு இயக்கத்தின் மத்திய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
தனிப்பட்ட சாதனைகள்
தனிப்பட்ட குழுக்கள் அதாவது கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் (3-லிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்) ஆகியோரின் நலனுக்காக பிரத்யேக யோகா முறைகள் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் ஆலோசனையோடு உருவாக்கப்படுகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்க வழிவகுக்கும் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சியை தொடர்ந்து காயங்குளம், கொல்லம், தபோவன், விந்தியாச்சல், பராகா ஆகிய இடங்களின் 5 ஆயுஷ் மையங்களை அமைக்க தேசிய அனல் மின் கழகம் ஒப்புக் கொண்டது.
ஆங்கில மொழியில் ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகளின் விளைவாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொல்லியல் ஆணையம், ஆயுஷ் என்ற வார்த்தையை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவியல் மற்றும் தொழில் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தது.
முக்கியமான நாட்கள் கொண்டாடப்பட்டன
மக்களிடையே சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்ச்சியை உண்டாக்க மத்திய சித்தா கழகத்தின் மூலமாக ஆயுஷ் அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி அன்று சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் முதல் சித்தா நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.
- யுனானி தினத்தையொட்டி புதுதில்லியில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11-ந் தேதிகளில் யுனானி மருந்திற்கான மத்திய ஆராய்ச்சிக் கழகம் யுனானி மருத்துவம் பற்றிய சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.
- 2018 ஆம் ஆண்டு 3-வது யோகா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தக் கழகம் செப்டம்பர் மாதம் 16ந் தேதி தொடங்கி 50 நாட்களுக்கு ஆயுர்வேத சேவை மையங்களை மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையகத்திலும், நாடெங்கிலும் உள்ள 30 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மையங்களிலும் ஏற்பாடு செய்தது.
ஆயுஷ் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான அமைச்சகம், சுகாதாரம் குடும்ப நல அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் வழிகாட்டுதலின் பேரில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள், பயிற்சி நிறுவனங்கள்,
ஆராய்ச்சிக் கழகங்கள் மற்றும் புற மையங்களில் செப்டம்பர் மாதம் “போஷன் மாதமாக” கொண்டாடப்பட்டது.
*****
(Release ID: 1556958)