வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ஆண்டிறுதி அறிக்கை -2 –பொலிவுறு நகரங்கள்-2018
Posted On:
23 DEC 2018 1:53PM by PIB Chennai
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உலகின் மிகப் பெரும் திட்டங்களில் ஒன்றான நகர்ப்புற புத்தாக்கத்திற்கான இந்திய நகரங்களை புதுப்பிக்கும் திட்டத்தை ரூ.6,85,758 கோடிக்கும் மேலான செலவில் செயல்படுத்தி உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் குடிமக்களின் நலன்களை உறுதி செய்வதற்காக இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நகர்ப்புற முக்கிய மறுசீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமாகவும், நகர்ப்புற புத்தாக்க திட்டங்கள் மூலமாகவும் தூய்மை பாரதம் இயக்கத்தின் வாயிலாக பொது மற்றும் தனிநபர் இல்ல கழிப்பிடங்கள் அமைப்பது மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலமாகவும் பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் வாயிலாக 2,05,018 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் பொலிவுறு நகரங்களை ஏற்படுத்த முன்முயற்சி மேற்கொண்டதாலும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அனுமதி அளித்ததன் மூலமாகவும் அம்ருத் இயக்கத்தின் கீழ் குடிநீர், கழிவுநீர் வடிகால் மற்றும் சுகாதார திட்டங்கள் ரூ.77,640 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டதாலும் புதிய மெட்ரோ ரெயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தியதன் மூலமாகவும், திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில் நகர்ப்புற இளைஞர்களுக்கு பல்வேறு திறன்களை கற்றுத் தந்ததோடு வேலைவாய்ப்பிற்கும் உதவி புரிந்ததாலும் ஹ்ருதய் திட்டத்தின் கீழ் நகர்ப்புற மேம்பாட்டுக்காக 12 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருவதாலும் நாட்டில் நகர்ப்புற மறுஉருவாக்கம் நிறைவேறி வருகிறது.
பொலிவுறு நகர இயக்கம்
பொலிவுறு நகர இயக்கத்தின் கீழ் அனைத்திந்திய போட்டியின் அடிப்படையில் நடைபெற்ற 4 சுற்றுகளில் 100 பொலிவுறு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. 100 நகரங்களிலும் சிறப்பு நோக்க வாகனங்கள் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 5,151 திட்டங்கள் கண்டறியப்பட்டு 100 நகரங்களில் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.10,116 கோடி மதிப்பிலான 534 திட்டங்கள் முழுமை பெற்றுள்ளன. ரூ.43,493 கோடி செலவில் 1177 திட்டங்களை அமல்படுத்துவது தொடங்கி உள்ளது. இவற்றில் ரூ.38,207 கோடி செலவிலான 677 திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கோருவது தொடங்கப்பட்டுள்ளது. பொலிவுறு தீர்வுகள், பொலிவுறு சாலைகள், சுத்தமான குடிநீர், சூரிய சக்திக்கான மேற்கூரை உள்ளிட்ட திட்டங்களின் அமலாக்கத்திற்கான விவரங்கள் பின்வருமாறு-
- அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்: 11 நகரங்களில் ரூ.1558 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 29 நகரங்களில் ரூ.3,049 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் 21 நகரங்களில் ரூ.2,730 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
- பொலிவுறு சாலைகள்: 4 நகரங்களில் ரூ.228 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 34 நகரங்களில் ரூ.3819 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் 10 நகரங்களில் ரூ.2069 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
- சுத்தமான குடிநீர் திட்டங்கள்: 18 நகரங்களில் ரூ.902 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 35 நகரங்களில் ரூ.5961 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் 17 நகரங்களில் ரூ.921 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
- சூரிய மின் சக்தி திட்டங்கள்: 8 நகரங்களில் ரூ.58 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 42 நகரங்களில் ரூ.828 மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் 9 நகரங்களில் ரூ.300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
- மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள்: 16 நகரங்களில் ரூ.179 கோடிக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 32 நகரங்களில் ரூ.3,701 கோடிக்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 20 நகரங்களில் ரூ.2,828 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
- மின்னணு மூலம் பணம் செலுத்துவதை அமல்படுத்தியுள்ள பொலிவுறு நகரங்களுக்கு விருதுகளை வழங்குவது ஜூலை 9, 2018 அன்று தொடங்கப்பட்டது.
பொலிவுறு நகரங்களில் மின்னணு வழியாக பணபரிவர்த்தனை மேற்கொள்வதை அங்கீகரித்து, ஆதரித்து வழிநடத்தும் நகரங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. புதுமையான பணபரிவர்த்தனை முன்முயற்சிகளை மேற்கொள்ளும் இத்தகைய 65 நகரங்கள் 2-ம் கட்டத்திற்கான போட்டியில் பங்கு பெற்றன. அந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
*****
(Release ID: 1557328)