வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளர முறை வளர்ச்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 JAN 2019 8:53PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளர முறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
நன்மைகள்:
இந்தியாவில் வியாபாரத்தை எளிமையாக்குவதற்காக இந்தியா எடுத்து வரும் முயற்சிகளை விரைவுபடுத்தும் வகையில், வியாபார செயல்பாடுகளில் தேவையான நிர்வாக வழிமுறைகளை மேற்கொள்ளும் வகையிலும், இந்த வழிமுறைகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான அமைப்பினை உருவாக்கும் வகையிலும், ‘மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளர’த்தை உருவாக்கி, அதனை மத்திய மற்றும் மாநில அரசுகளில் செயல்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான கூட்டுறவை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை மேம்படுத்தும். அளவிடக்கூடிய அளவுறுக்களுடனும், இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் உள்ள சிறந்த நடைமுறைகளின் அடிப்படையிலுமான ‘மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளரம்’, இந்தியாவில் ஒற்றை சாளர முறையினை ஏற்படுத்துதில் உள்ள சாத்திய தடைகளை கண்டறியும். இது, முதலீடுகளுக்கு வழிவகுக்கும்.
******
(रिलीज़ आईडी: 1559516)
आगंतुक पटल : 169