வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கை குறித்த பாபா கல்யாணி குழு அறிக்கை மீது வர்த்தக அமைச்சகம் ஆலோசனைகளை வரவேற்கிறது

Posted On: 22 JAN 2019 11:48AM by PIB Chennai

இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கையை ஆய்வு செய்ய பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பாபா கல்யாணி தலைமையில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சம்பந்தப்பட்டவர்களைக் கொண்ட குழு ஒன்றைத் தொழில், வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தகத்துறை ஜூன் 2018-ல் அமைத்தது. இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசனைகளையும் / விமர்சனங்களையும் பெறுவதற்கு  அறிக்கையின் பிரதி ஒன்று ‘SEZindia.nic.in’  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலோசனைகளை ஜனவரி 30, 2019-க்குள் moc_epz[at]nic[dot]in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

------


 


(Release ID: 1560881)