வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பாட்னாவில் பொதுப் போக்குவரத்து மற்றும் இணைப்புக்கான உத்வேகம்
Posted On:
13 FEB 2019 9:20PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்னாவில் ரூ. 13,365.77 கோடி மதிப்பிலான (i) தானப்பூர்- மித்தாப்பூர் (ii) பாட்னா ரயில்வே நிலையத்தில் மாநிலங்களுக்கு இடையேயான புதிய முனையம் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் தடங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
திட்ட விவரங்கள்:
- இத்திட்டம் ஐந்து வருடங்களில் முடிக்கப்படும்
- தானாப்பூர் – மித்தாப்பூர் வழித்தடம் நகரின் மையப் பகுதியின் ஊடே அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ராஸா பஸார், தலைமைச்செயலகம், உயர்நீதிமன்றம், சட்டப்பல்கலைக்கழக ரயில் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும்.
- பட்னா ரயில் சந்திப்புக்கும் மாநிலங்கள் இடையே பேருந்து முனையத்திற்கும் இடையேயான வழித்தடம் காந்தி மைதான், பட்னா பல்கலைக்கழகம், ராஜேந்திர நகர், மகாத்மா காந்தி சேது, போக்குவரத்து நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும்.
- இந்த மெட்ரோ ரயில் திட்டம் பட்னாவாசிகள், பயணிகள், தொழிலாளர்கள், பட்னாவிற்கு வருகை தருவோர் ஆகியோருக்கு பசுமையான நட்போடு கூடிய நீடிக்கத்தக்க பொது போக்குவரத்து வசதியை வழங்கும்.
*******
(Release ID: 1564429)