சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலம் மூன்றாண்டுகளுக்கு நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 13 FEB 2019 9:19PM by PIB Chennai

துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக் காலத்தை, 31.03.2019 -லிருந்து  மூன்றாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

இந்த ஆணையம், துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையச் சட்டம் 1993 –ன் கீழ், 1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.  துவக்கத்தில் 31.03.1997 வரை இதன் பதவிக்காலம் இருந்தது.  பின்னர்,  அது 31.03.2002 வரையிலும், பிறகு 29.02.2004 வரையிலும்  நீட்டிக்கப்பட்டது.  29.02.2004 அன்று இந்தச் சட்டம் காலாவதியானது.  அதற்கு பிறகு, துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம்,  நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் இல்லாமல் உருவாக்கப்பட்ட அமைப்பாக  கருதப்பட்டு, அதன் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆணையத்தின் தற்போதைய பதவிக் காலம் 31.03.2019 வரையாகும்.

**************


(रिलीज़ आईडी: 1564436) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada