சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்தியப்பிரதேசம் குவாலியரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
28 FEB 2019 10:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்தியப்பிரதேசம் குவாலியரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனம் சமூக பதிவு சட்டம், 1860-ன் கீழ் பதிவு செய்யப்படும். குவாலியரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் என்ற பெயரில் இது இயங்கும். ஐந்தாண்டுகளுக்கு ரூ.170.99 கோடி மதிப்பில் இந்த மையம் அமைக்கப்படும்.
பயன்பாடு:
இந்த மையத்தில் அமைக்கப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பினால் விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதை உறுதி செய்ய முடியும். மேலும் அவர்கள் தேச மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடவும் இது உதவும். இந்த மையம் அமைக்கப்படுவதின் மூலம் சமூகத்தின் ஓர் அங்கமாக மாற்றுத்திறனாளிகள் தங்களை உணர்வார்கள்.
*******
(रिलीज़ आईडी: 1567048)
आगंतुक पटल : 140