சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணைய அலுவலகத்தில் இரண்டு ஆணையர்கள் பதவியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 28 FEB 2019 10:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம், 2016-ன் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் அலுவலகத்தில் இரண்டு ஆணையர்கள் பதவியை உருவாக்குவதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு ஆணையர்கள் பதவியில், ஒரு பதவி மாற்றுத்திறனாளிக்கானது.

மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு ஆணையர்களும் தலைமை ஆணையர் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி தமது செயல்பாடுகளை மேற்கொள்ள உதவியாகப் பணிபுரிவார்கள். இதன் மூலம் இந்த அலுவலகம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புகார்களுக்கு வேகமாக தீர்வு காண்பதுடன், கண்காணிப்பு முறையையும் வலுப்படுத்த முடியும்.

                                    ****


(रिलीज़ आईडी: 1567063) आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Kannada