அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்திற்கு இந்தியா-பிரிட்டன் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 07 MAR 2019 2:43PM by PIB Chennai

புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்திற்கு இந்தியா-பிரிட்டன் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 நவம்பர் 14 அன்று கையெழுத்தானது. 

விவரங்கள்:

      இந்தியாவிலும், பிரிட்டனிலும் உள்ள மருத்துவ சோதனைக்கூட ஆராய்ச்சி, மக்கள் நிலை ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்பியல் நிபுணர்களை ஒருங்கிணைத்து குறைந்த செலவில் சிகிச்சை, நோய்த் தடுப்பு, புற்றுநோய்க்கான கவனிப்பு ஆகிய ஆராய்ச்சி சவால்களை அடையாளம் காண இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. கூட்டாக புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ள நிதியுதவியும் கிடைக்கும்.  புற்றுநோய்க்கு எதிராக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.    

*****


(रिलीज़ आईडी: 1567888) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Kannada