சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        இந்தியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                07 MAR 2019 2:21PM by PIB Chennai
                
                
                
                
                
                
                சாலை உள்கட்டமைப்புத் துறையில் இந்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஆஸ்திரியாவின் போக்குவரத்து, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப நடுவண் அமைச்சகத்திற்கும் இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
தாக்கம் :
இரு நாடுகளுக்கு இடையே சாலைப் போக்குவரத்து, சாலை / நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வசதி, மேலாண்மை மற்றும் நிர்வாகம், சாலைப்பாதுகாப்பு மற்றும் அறிவுசார்ந்த போக்குவரத்து முறை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான பயனுள்ள கட்டமைப்பை உருவாக்குவதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட உறவுகளை முன்னெடுத்துச் சென்று வலுப்படுத்துவதோடு, இந்தியக் குடியரசுக்கும் ஆஸ்திரியக் குடியரசுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் மண்டல ஒருமைப்பாட்டை மேம்படுத்த உதவும். 
                                    ****
                
                
                
                
                
                (Release ID: 1567904)
                Visitor Counter : 154