நீர்வளத் துறை அமைச்சகம்

ஐதராபாதின் நல்லகண்ட்லாவில் மத்திய நீர்வள ஆணையத்திற்கு சொந்தமான நிலத்தை, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தெலங்கானா மாநில அரசு கையகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 27 MAR 2019 1:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஐதராபாதில் மத்திய நீர்வள ஆணையத்திற்கு சொந்தமான நிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் (சுமார் 200 மீ) உள்ளிட்ட பத்து ஏக்கர் நிலத்தில், 372 சதுர அடி நிலத்தை, ஆரச்சாலை எண்.30 மேம்பாட்டுப் பணிகளுக்காக தெலங்கானா அரசு கட்டணம் ஏதுமின்றி கையகப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

      அந்த இடத்தில் அமைக்கப்பட உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் உயர் சிறப்பு மையத்திற்கு, விரிவுப்படுத்தப்பட்ட சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

----


(रिलीज़ आईडी: 1569600) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Telugu