வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பியூஷ் கோயல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்

Posted On: 31 MAY 2019 3:43PM by PIB Chennai

     மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை பொறுப்பை இன்று பிற்பகல் ஏற்றுக்கொண்டார். அப்போது முன்னாள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு உடனிருந்தார்

பொறுப்பேற்ற பிறகு பேசிய திரு.பியூஷ் கோயல் தொலைநோக்குப் பார்வை கொண்ட திரு.சுரேஷ் பிரபு போன்ற ஒருவரது பணியை மிகுந்த தன்னடக்கத்துடன் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், இவ்வமைச்சகத்தின் பணியை முன்னெடுத்துச் செல்ல தம்மால் முடிந்த அனைத்தையும்  முயற்சிக்கவிருப்பதாகவும் கூறினார். மேலும், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்து, உடனே கவனிக்கப்பட வேண்டியவற்றை சமாளிக்க தாம் தம்மை தயார்படுத்திக் கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.

----


(Release ID: 1572930) Visitor Counter : 189