நிதி அமைச்சகம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், அவற்றில் முதலீடு செய்பவர்களும் தாக்கல் செய்யும், தேவையான அறிவிக்கைகள் பங்கு ப்ரீமியங்களின் மதிப்பீட்டுக்கு எந்த வகையிலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது
Posted On:
05 JUL 2019 1:36PM by PIB Chennai
ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், அவற்றில் முதலீடு செய்பவர்களும் தாக்கல் செய்யும், தேவையான அறிவிக்கைகள் பங்கு ப்ரீமியங்களின் மதிப்பீட்டுக்கு எந்த வகையிலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. ஏஞ்சல் டேக்ஸ் எனப்படும், பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிலுவையில் உள்ள மதிப்பீடுகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (CBDT) மூலம் சிறப்பு நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, குடியிருப்பு வீடுகளை விற்று திரட்டப்படும் முதலீட்டுக்கு, மூலதன ஆதாயத்தில் இருந்து விலக்கு அளிக்கும் வரம்பை 31.3.2021 வரையில் நீட்டிப்பதாகவும், இந்த விலக்கில் சில நிபந்தனைகளை தளர்த்துவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
மேற்குறிப்பிட்ட வரிச் சலுகைகள் தவிர, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கென பிரத்யேகமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல்களின் தொகுப்புகளில் தொடங்க உத்தேசிக்கப் பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள புதிய நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பெரிய உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு, வெளிப்படையான போட்டி ஏலத்தின் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு திட்டத்தை அரசு தொடங்கும். இதன்மூலம் முதலீட்டுடன் இணைந்த வருமான வரி விலக்குகள், வருமான வரி சட்டத்தின் 35 AD பிரிவுகள் மூலம் அளிக்கப்படும். மற்ற மறைமுக வரிச் சலுகைகளும் அளிக்கப்படும்.
.
********
(Release ID: 1577494)