நிதி அமைச்சகம்
பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்திலும் பொது மக்களின் பங்கு வைத்திருப்பதற்கான 25% நடைமுறைகளை அமல் செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
प्रविष्टि तिथि:
05 JUL 2019 1:39PM by PIB Chennai
பொதுத் துறை நிறுவனங்களில் பொது மக்களின் பங்கு அதிகம் இருப்பதற்காகவும், பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின் வர்த்தக மற்றும் சந்தை சார்ந்த பார்வை பரவலானதாக இருக்கும் வகையிலும், அந்த நிறுவனங்களில் மக்களுக்கு 25% பங்குகள் இருக்க வேண்டும் என்ற நடைமுறையை அமல் செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். வளரும் சந்தை குறியீட்டில் அங்கம் வகிக்கும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும், அனுமதிக்கக் கூடிய அதிகபட்ச அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் புதிய ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய் நாணயங்கள் விரைவில் பொது மக்களின் புழக்கத்துக்கு விடப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜிடிபிக்கு எதிரான இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் உலக அளவில் மிகவும் குறைவாக 5% என்ற அளவில் இருக்கிறது.
********
(रिलीज़ आईडी: 1577496)
आगंतुक पटल : 228