நிதி அமைச்சகம்

2020-க்குள் அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை அடைய கிராமப்புற பிரதமர் வீட்டு வசதி திட்டம் இலக்கு

Posted On: 05 JUL 2019 1:40PM by PIB Chennai

2020-க்குள் அனைவருக்கும் வீடு” என்ற குறிக்கோளை அடைய  வேண்டும் என்று கிராமப்புற பிரதமர் வீட்டு வசதித் திட்டம்  இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்து பேசிய அமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 1.54 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன என்றும், இரண்டாவது கட்டமாக 2019-22-ல், தகுதியுள்ள பயனாளிகளுக்கு 1.95 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த வீடுகளில் கழிப்பறை, மின்சாரம், எல்.பி.ஜி இணைப்புகள்  வசதி வழங்கப்படும்.

பிரதமர் கிராம சாலைத் திட்டம்-3 குறித்து பேசுகையில், “ரூ. 80,250 கோடி செலவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,25,000 தூரத்திற்கு சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது”  என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். மேலும் முடிவடைய வேண்டிய இலக்கு 2022-ல் இருந்து 2019 ஆக முன்னேறியுள்ளது. கடந்த 1000 நாட்களில், நாள் ஒன்றுக்கு 130 முதல் 135 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டதால் இது சாத்தியமானது. இத்திட்டத்தின் கீழ் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க 20,000 கி.மீ தூரத்திற்கு பசுமை தொழில்நுட்பம், கழிவு பிளாஸ்டிக் மற்றும் கோல்ட் மிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டன என்றும் கூறினார்.

உஜ்வாலா மற்றும் சௌபாக்கியா திட்டம் குறித்துப் பேசிய நிதி அமைச்சர், ஒவ்வொரு கிராமக் குடும்பத்தின் வாழ்கையையும் மாற்றி அமைத்து, 2020 –குள் 75 வது சுதந்திர இந்தியா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் மின்சாரம் மற்றும் தூய்மையான சமையல் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறினார். 7 கோடி எல்.பி.ஜி இணைப்புகள் வழங்கப்பட்டன என்றும், அனைத்து கிராமங்களிலும் ஏறத்தாழ 100% வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், விருப்பம் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் 2022- க்குள் மின்சார வசதி மற்றும் தூய்மையான சமையல் வசதி செய்த தரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

********


(Release ID: 1577501)
Read this release in: Marathi , Telugu , English