நிதி அமைச்சகம்
இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் பெண்களின் பங்கை ஊக்குவிக்க அரசு முடிவு
Posted On:
05 JUL 2019 1:38PM by PIB Chennai
இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் பெண்களின் பங்கை ஊக்கவிக்க அரசு விரும்புகிறது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான ஊரகப் பொருளாதாரத்தில் மகளிரின் பங்கு என்பது இனிமையான கதையாகும் என்று தெரிவித்தார்.
மக்கள் நிதித் திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட பெண்ணுக்கும் ரூ.5,000 மதிப்பிலான மிகைப்பற்று (ஓவர் டிராப்ட்) வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மகளிர் சுயஉதவிக் குழு வட்டி மானியத் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், முத்ரா திட்டத்தின்கீழ் மகளிர் சுயஉதவிக் குழுவில் தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசு, தொழில் முனைவோர் திட்டத்திற்கான முத்ரா, எழுந்திடு இந்தியா, சுயஉதவிக் குழு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
***********
(Release ID: 1577502)