நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி செயல்பாடுகள் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன; பொருட்களை சப்ளை செய்வோருக்கான விலக்கு வரம்பு அதிகபட்சமாக ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
Posted On:
05 JUL 2019 1:33PM by PIB Chennai
ஜிஎஸ்டி செயல்பாடுகளை மேலும் எளிமைப்படுத்தல், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது சாலை மற்றும் கட்டமைப்புக்கான தீர்வை மற்றும் சிறப்பு கூடுதல் எக்சைஸ் தீர்வையை ரூ. 1 அதிகரித்தல், தங்கம் மற்றும் இதர அரிதான உலோகங்கள் மீதான சுங்க வரியை 12.5 % ஆக உயர்த்துவது, கச்சா எண்ணெய் மற்றும் புகையிலைப் பொருட்களின் மீதான அடிப்படையான எக்சைஸ் தீர்வையை ஓரளவிற்கு அதிகரிப்பது ஆகியவை 2019-20 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் தொடர்பான ஆலோசனைகளில் சிலவாகும். குறிப்பிட்ட சில பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்யும் போது அதன் மீதான அடிப்படை சுங்க வரியில் இருந்து அவற்றுக்கு விலக்களிப்பது, ஒரு சில கச்சாப் பொருட்களின் மீதான சுங்க வரியைக் குறைப்பது, பதப்படுத்தாத மற்றும் ஓரளவிற்குப் பதப்படுத்தப்பட்ட தோலின் மீதான ஏற்றுமதி வரியை ஒழுங்குபடுத்துவது ஆகிய முன்மொழிவுகளையும் அது உள்ளடக்கியிருந்தது.
பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சம் வரையாக உயர்த்துவதெனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
விலைப்பட்டியல் வழங்கும்போதே விலைப்பட்டியல் குறித்த விவரங்களை ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் பதிவு செய்து கொள்ளும் மின்னணு முறையிலான விலைப்பட்டியல் முறைக்கு மாறிச் செல்லவும் பட்ஜெட் முன்மொழிந்துள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்வதற்கு முன்பு பெருமளவில் நிலுவையில் இருந்த வழக்குகளைப் பொறுத்தவரையில், ரூ. 3.75 லட்சம் கோடிக்கும் மேலான தொகை சேவை வரி மற்றும் எக்சைஸ் வரி தொடர்பான வழக்குகளில் முடங்கிக் கிடக்கின்ற நிலையில் இந்தச் சுமையை இறக்கி விட்டு, வர்த்தகம் தொடர்ந்து நடைபெற வழி காண வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதும் மேம்படுத்துவதும் உடனடித் தேவையாகவும் தேசிய முன்னுரிமையாகவும் இருக்கின்றது என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், இந்தியாவில் உற்பத்தியாக பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்யும்போது அவற்றுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்களிக்கவும் இந்த பட்ஜெட்டில் முன்மொழிந்தார்.
இந்தியாவில் உற்பத்தி செய்வது என்பது நமது மனதிற்கு உகந்த இலக்கு என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் சமநிலையில் செயல்படுவதற்கான களத்தை வழங்கும் வகையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியை உயர்த்தவும் பரிந்துரைத்தார்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது சாலை மற்றும் கட்டமைப்புக்கான தீர்வை மற்றும் சிறப்பு கூடுதல் எக்சைஸ் தீர்வையை ரூ. 1 மேலும் அதிகரிக்கவும் இந்த பட்ஜெட் பரிந்துரை செய்துள்ளது.
தங்கம் மற்றும் இதர விலை உயர்ந்த உலோகங்களின் மீதான சுங்க வரி 10%லிருந்து 12.5 % ஆக அதிகரிக்கப்படும் என்றும் திருமதி. சீதாராமன் அறிவித்தார்.
சுங்க வரிக்கான சட்டத்தில் சில திருத்தங்களையும் நிதியமைச்சர் முன்மொழிந்தார். “தேவையில்லாத சலுகைகளையும், ஏற்றுமதி மானியங்களையும் பெறுவதற்கென சில குறிப்பிட்ட போலி அமைப்புகள் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பது சமீபத்திய போக்குகளின் மூலம் தெரியவந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். வரிவிலக்கு பெற்ற பங்குகளையும், ரூ. 50 லட்சத்திற்கும் மேலான குறைபாட்டு வசதியையும் தவறாகப் பயன்படுத்துவது ஆகிய செயல்கள் உத்தரவின்றி கைது செய்வதற்கும் பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாகக் கருதப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
********
(Release ID: 1577516)