நிதி அமைச்சகம்

இந்திய விண்வெளியின் வர்த்தக திறனை அதிகரிக்க, புதிய இந்திய விண்வெளி நிறுவனம் அமைப்பு

Posted On: 05 JUL 2019 1:41PM by PIB Chennai

விண்வெளி துறையின் புதிய வர்த்தக நிறுவனமாக புதிய விண்வெளி இந்தியா நிறுவனம் விண்வெளித் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்து பேசிய அமைச்சர், குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற  விண்வெளி கருவிகளை செலுத்தும் பெரும் சக்தியாக இந்தியா வளர்ந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த திறனை வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் தருணம் வந்து விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.ஆர்.ஒ மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் மேம்பாடுகளின் பலன்களை உபயோகிக்கும் வகையில், விண்வெளி துறையின் புதிய வர்த்தக கிளையாக புதிய இந்திய விண்வெளி நிறுவனம் என்ற பொது துறை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிறுவனம், செயற்கைக்கோள் செலுத்து வாகனம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் விண்வெளி பொருட்கள் சந்தைபடுத்துதல் போன்ற பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

*****


(Release ID: 1577561)
Read this release in: English , Marathi , Bengali , Telugu