பிரதமர் அலுவலகம்

இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 18 NOV 2019 11:04AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. கோத்தபய ராஜபக்சேவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய மக்களின் சார்பிலும், தமது சார்பிலும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், திரு. ராஜபக்சேயின் திறமையான தலைமையின் கீழ் இலங்கை மக்கள் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் மேலும் முன்னேற்றமடைவார்கள் என்றும், இந்தியா – இலங்கை இடையே சகோதரத்துவம், கலாச்சாரம், வரலாறு, நாகரிகம் தொடர்பான  உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை அரசுடன் இந்த உறவைத் தொடர இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் வாழ்த்துக்கு திரு.ராஜபக்சே நன்றி தெரிவித்தார். மேம்பாடு, வளர்ச்சியை உறுதி செய்ய இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவுக்கு விரைவில் வசதிக்கேற்ப வருகை தருமாறு திரு.ராஜபக்சேவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு ஏற்கப்பட்டுள்ளது.

 

                                *****


(रिलीज़ आईडी: 1591907) आगंतुक पटल : 104