சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பிரதமர் இயற்றியுள்ள “தேர்வுப் போராளிகள்” என்ற நூலின் பிரெய்ல் பதிப்பை திரு தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார்

Posted On: 18 DEC 2019 5:20PM by PIB Chennai

பிரதமர் இயற்றியுள்ள “தேர்வுப் போராளிகள்” என்ற நூலின் பிரெய்ல் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் புதுதில்லியில் இன்று (18.12.2019) வெளியிட்டார். ராஜஸ்தான் பார்வையற்றோர் கல்யாண் சங்கத்தின் பிரெய்ல் அச்சகத்தில் இந்த ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பிரெய்ல் பதிப்புகள் தயாரிக்கப்பட்டன. இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் “தேர்வுப் போராளிகள்” நூலின் பிரெய்ல் பதிப்பு வெளிவருவது மிகவும் பொருத்தமுடையதாகும். இந்த நூலில் உள்ள அனைத்துப் படங்களும் பார்வையற்ற வாசகர்களின் நலனுக்கென தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பான பணிக்காக ராஜஸ்தான் பார்வையற்றோர் கல்யாண் சங்கத்தை பாராட்டிய திரு.கெலாட், இந்த பிரெய்ல் பதிப்பு நாட்டின் லட்சக்கணக்கான பார்வையற்ற மாணவர்களின் இயல்பூக்கத்தையும், மன உறுதியையும் அதிகரிக்கும் என்று கூறினார்.

                                          ****


(Release ID: 1596872) Visitor Counter : 170
Read this release in: English , Urdu , Hindi , Bengali