சுற்றுலா அமைச்சகம்

புதிதாக தொடங்கப்பட்ட “ஸ்ட்ராண்டட் இன் இந்தியா” (Stranded in India) இணையதளம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுகிறது

Posted On: 03 APR 2020 12:50PM by PIB Chennai

இந்திய சுற்றுலா அமைச்சகம், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல்கள் மற்றும் பிற நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிப்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதுடன், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைப்புடனும், கண்காணிப்புடனும்  செயல்பட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கைகள் அந்தந்த மாநிலங்களின் இந்திய சுற்றுலா அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. கொவிட்-19ன் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பயணிகள் பட்டியல்கள் மாநில அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொவிட்-19னால் பாதிக்கப்படக்கூடிய நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், ஹோட்டல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய சுற்றுலா அமைச்சகம், மாநில சுற்றுலாத் துறைகள் மற்றும் மாநில நிர்வாகத்துடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ”ஸ்ட்ராண்டட் இன் இந்தியா” (Stranded in India) போர்டல் இணையதளம் வெற்றிகரமாக செயல்பட்டு, சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாடுகளுக்கு பாதுகாப்பாக திரும்ப உதவுகிறது. இந்த போர்டல், பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து பணிகளை செயல்படுத்த உதவுகின்றது. குஜராத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க நாட்டினருக்கு குஜராத் அரசு வாகன அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளது. மேலும், அவர்கள் நம் நாட்டிற்குள் பயணிக்கவும், பின் அவர்களது நாட்டிற்கு விமானங்களில் அனுப்பி வைக்கவும் குஜராத் மாநில சுற்றுலாத்துறையும், இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் மேற்கு பிராந்திய அலுவலகமும், அமெரிக்க தூதரகத்துடன் ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருகின்றன.

பீகாரில் சிக்கித் தவித்த ஒரு அமெரிக்க பெண்மணி தனது பயணத்திற்காக டெல்லி செல்வதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

மூன்று ஆஸ்திரேலிய குழுக்கள் சிலிகுரி மற்றும் கொல்கத்தாவில் சிக்கி, ”ஸ்ட்ராண்டட் இன் இந்தியா” (Stranded in India) இணையதளம் மூலம் தாயகம் திரும்பக் கோரிக்கை விடுத்தனர். இந்திய சுற்றுலாவின் கொல்கத்தா அலுவலகம் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தில்லியில் உள்ள உயர் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றி அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வழி வகை செய்தனர்.

•••••••••••••••


(Release ID: 1610704) Visitor Counter : 183