உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உள்நாட்டு சரக்கு விமானங்கள் வலுப்படுத்தியுள்ளன

प्रविष्टि तिथि: 04 APR 2020 1:58PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான நாட்டின் போராட்டத்துக்கு கொள்கை அளவிலும், கள அளவிலும் வலுச்சேர்க்கும் தொடர்ச்சியான முயற்சிகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. பரிசோதனை உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பல மருத்துவப் பொருள்களையும் உள்நாட்டு சரக்கு விமானங்கள் நாடு முழுவதும் விநியோகித்து வருகின்றன.

2020 மார்ச் 26-ஆம் தேதி முதல், இந்த விமானங்கள் 1,02,115 கிலோமீட்டர் தூரம் பறந்து, 138.81 டன் சரக்குகளைக் கொண்டு சென்றுள்ளன.

‘உயிர்நாடி உடான்‘ என்ற பிரத்தியேக மருத்துவ சரக்கு விமானம் தொடர்பான வலைதளம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

சர்வதேச அளவில், தில்லிக்கும், ஷாங்காய்க்கும் இடையே விமானப்போக்கு வரத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ஏர் இந்தியா சரக்கு விமானம் புறப்படும். முக்கியமான மருத்துவ உபகரணங்களை சீனாவுக்கு ஏற்றிச் செல்லும் பிரத்யேக சரக்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கும்.


(रिलीज़ आईडी: 1611022) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada