நிதி அமைச்சகம்

ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பி கொடுத்தல்களையும் வருமான வரித் துறை உடனே செய்யும்; சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள்

அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க திருப்பிக் கொடுத்தல்களும் உடனே செய்யப்படும்; குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்களுக்குப் பயன் கிடைக்கும்

ரூ. 18,000 கோடி மொத்த திருப்பி கொடுத்தல்களுக்கு உடனடி அனுமதி.

प्रविष्टि तिथि: 08 APR 2020 6:16PM by PIB Chennai
கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டும், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டியும், ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பிக் கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் இதன் மூலம் பயனடைவார்கள். அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க திருப்பி கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்ககுக்கு இது பயன் அளிக்கும். தோராயமாக, ரூ. 18,000 கோடி மொத்த திருப்பி கொடுத்தல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ***

(रिलीज़ आईडी: 1612321) आगंतुक पटल : 408
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam