நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மாநில அரசுகள் வழங்கியுள்ள ரேசன் அட்டை வைத்துள்ள, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத பயனாளிகளுக்கும் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்
இடுகை இடப்பட்ட நாள்:
09 APR 2020 8:46PM by PIB Chennai
உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி வரும் ,இந்திய உணவுக்கழகம், 9.4.2020 அன்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. நாடு முழுவதும் 81 கோடிக்கும் மேற்பட்டோருக்கு 5.3 லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம் உணவுப் பொருள்களை விநியோகித்து வரும் இந்திய உணவுக் கழகம் , 77 வாரிகளைக் கொண்ட 2.16 லட்சம் மெட்ரிக் டன் உணவுப்பொருட்களை ரயிலில் ஏற்றிச்சென்றது. இத்துடன், ஊரடங்கு முடக்கம் துவங்கியதில் இருந்து , இந்திய உணவுக் கழகம் இதுவரை மொத்தம் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியங்களை ஏற்றி அனுப்பியுள்ளது.
பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், மொத்தம் 12.1 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நபருக்கு 5 கிலோ வீதம் 3 மாதங்களுக்கு 81 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
(வெளியீட்டு அடையாள எண்: 1612801)
வருகையாளர் எண்ணிக்கை : 361