நிதி அமைச்சகம்
செயற்கை சுவாசக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு கருவிகள், கோவிட் பரிசோதனை கிட்டுகள், முகக்கவசங்கள், அறுவை சிகிச்சை கவசங்கள் இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்கத் தீர்வை சுகாதார கூடுதல்வரிகளுக்கு அரசு விலக்களித்துள்ளது
प्रविष्टि तिथि:
09 APR 2020 10:42PM by PIB Chennai
கோவிட்19 தொற்று நிலைமையில், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் இதர பொருட்களுக்கான உடனடித் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசு பின்வரும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவற்றின் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை மற்றும் சுகாதார கூடுதல்வரி ஆகியவற்றுக்கு உடனடி விலக்கு அளித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
- செயற்கை சுவாசக் கருவிகள்
- முகக் கவசங்கள்
- அறுவை சிகிச்சை கவசங்கள்
- தனிநபர் பாதுகாப்புக் கருவிகள்
- கோவிட்19 தொற்று பரிசோதனைகிட்டுகள்
- மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களைத் தயாரிப்பதற்கான உள்ளீட்டு பொருட்கள்
இந்த அடிப்படை சுங்கத் தீர்வை விலக்கு 30 செப்டம்பர் 2020 வரை அமலில் இருக்கும்.
(रिलीज़ आईडी: 1612809)
आगंतुक पटल : 224