பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. மோடி புனித வெள்ளி செய்தி

प्रविष्टि तिथि: 10 APR 2020 10:59AM by PIB Chennai

உண்மை, சேவை மற்றும் நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஏசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.

``பிறருக்கு சேவை செய்வதில் ஏசு கிறிஸ்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய தைரியமும், அறநெறியும் தனித்துவமானவை. நீதிக்கான அவருடைய நிலைப்பாடும் தனித்தன்மையுடன் தான் இருந்தது. இந்தப் புனித வெள்ளி நாளில் ஏசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதியில் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம்'' என்று பிரதமர் திரு. மோடி கூறியுள்ளார்.

 

 


(रिलीज़ आईडी: 1612812) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam