பிரதமர் அலுவலகம்
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நட்பு நாடுகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் உறுதி
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2020 12:50PM by PIB Chennai
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நட்பு நாடுகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு அளித்த பதிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.
``இந்த நோய்த் தொற்றை எதிர்த்து நாம் கூட்டாகப் போராட வேண்டும். இதில் நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்து சாத்தியமான உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக உள்ளது. இஸ்ரேல் மக்கள் நலமாக, ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்'' என்று பிரதமர் திரு. மோடி தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1612857)
வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam