ரெயில்வே அமைச்சகம்

பயணிகள் ரயில்களின் பயணத் திட்டங்கள், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குதல் குறித்த ஊடக செய்திகள்: ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

प्रविष्टि तिथि: 10 APR 2020 1:42PM by PIB Chennai

ரயில் பயணிகளின் பல்வேறு வருங்காலத் திட்டங்கள் குறித்த சிலசெய்திகள் கடந்த இரு தினங்களாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல ரயில்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து பயணத்தைத் தொடங்குவதாகவும் அவை தெரிவிக்கின்றன.

மேற்கண்ட விஷயங்கள் குறித்தான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பதையும், அதற்கு முன்னரே இவ்வாறு செய்தி வெளியிடுவது தேவையில்லாத, தவிர்க்கத்தக்க யூகங்களை, தற்போதைய அசாதாரணசூழலில் மக்களின் மனங்களில் ஏற்படுத்துவதையும் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

அத்தகைய யூகங்களுக்கு வழி வகுக்கும் உறுதி செய்யப்படாத அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடாமல் தவிர்ப்பதை பரிசீலிக்குமாறு ஊடங்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது.

* பொது முடக்கத்துக்கு பிந்தைய ரயில் பணம் குறித்து, பயணிகள் உட்படத் தனக்கு தொடர்புடைய அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சிறந்த சாத்தியமான முடிவுகளை ரயில்வே எடுக்கும்.

* அப்படி ஒரு முடிவெடுத்தவுடன், தொடர்புடைய அனைவருக்கும் அதைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.


(रिलीज़ आईडी: 1612955) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam