நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய உணவுக் கழகத்தின் ஊழியர்களில் கோவிட்19 தொற்று காரணமாக உயிரிழக்க நேர்ந்தால் கருணைத் தொகை இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 APR 2020 7:39PM by PIB Chennai
உலகளாவிய நோயான கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையிலும், நாடு முழுவதும் உணவு தானியங்கள் கிடைப்பதற்காக, 24 மணி நேரமும் பணிபுரிந்து வரும் இந்திய உணவுக் கழகத்தில் உள்ள 80000 தொழிலாளர்கள் உட்பட 10814 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழக்க நேர்ந்தால், அவர்கள் குடும்பத்தினருக்கு கருணைத் தொகை இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின்படி, மார்ச் 24ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரையிலான காலத்தில், கோவிட்19 தொற்று காரணமாக, இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றும் போது, யாராவது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்தினருக்கு கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரப் பணியாளர்களுக்கு ரூ 15 லட்சம், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ரூ 10 லட்சம், முதல் பிரிவு அதிகாரிகளுக்கு ரூ 35 லட்சம் இரண்டாவது பிரிவு அதிகாரிகளுக்கு ரூ 30 லட்சம், மூன்று மற்றும் நான்காம் பிரிவு பணியாளர்களுக்கு ரூ 25 லட்சம் வழங்கப்படும்.
(रिलीज़ आईडी: 1613261)
आगंतुक पटल : 255