பாதுகாப்பு அமைச்சகம்

கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு இந்திய விமானப் படையின் ஆதரவு

இடுகை இடப்பட்ட நாள்: 11 APR 2020 6:26PM by PIB Chennai

நாவல் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான இந்திய அரசின் முயற்சிகளுக்கு உதவுவதற்காக எந்தப் பணியை செய்வதற்கும் இந்திய விமானப்படை 24X7 தொடர்ந்து தயாராக உள்ளது.

அத்தியாவசிய மருத்துவப் பொருள்களையும், பிற பண்டங்களையும் இணைப்பு இடங்களில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கடந்த இரு நாட்களாக வான்வழியாக இந்திய விமானப்படை எடுத்து சென்றது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் தயாரிப்பு மையங்களில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதற்காக 9,000 கிலோ மூலப்பொருள்களை பல்வேறு இணைப்பு இடங்களில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்துக்கான பிரத்யேக பயணங்களில் இந்திய விமானப்படை எடுத்துச் சென்றது.


(வெளியீட்டு அடையாள எண்: 1613518) வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada