பாதுகாப்பு அமைச்சகம்
எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஆக்சிஜன் கருவிகளை விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்திடம் இந்தியக் கடற்படை ஒப்படைத்தது
Posted On:
12 APR 2020 6:44PM by PIB Chennai
விசாகப்பட்டினம் கடற்படை கப்பல் தளத்தில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஆக்சிஜன் கருவிகள், விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.வினய் சந்திடம் ஒப்படைக்கப்பட்டன. கிழக்கு கடற்படை கட்டளை, மருத்துவ அதிகாரி ரியர் அட்மிரல் சி.எஸ். நாயுடு, ஆந்திரா மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். பி.வி. சுதாகர் ஆகியோர் முன்னிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று, கடற்படை தளத்தின் அட்மிரல் கண்காணிப்பாளர் ஶ்ரீகுமார் நாயர், கருவிகளை ஒப்படைத்தார். இந்தத் தொகுப்புக்கருவிகள் மூலம், ஒரு பெரிய ஆக்சிஜன் குப்பியிலிருந்து ஒரே சமயத்தில் ஆறு நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வழங்க முடியும். 5 தொகுப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 20 தொகுப்பு கருவிகளை அடுத்த 2 வாரங்களில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
(Release ID: 1613813)