சுற்றுலா அமைச்சகம்

"உங்கள் தேசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்” (தேகோ அப்னா தேஷ்) இணையக் கருத்தரங்கு வரிசையின் இரண்டாவது கருத்தரங்கை இன்று நடத்தியது சுற்றுலா அமைச்சகம்

प्रविष्टि तिथि: 16 APR 2020 4:43PM by PIB Chennai

இந்திய மக்கள் தங்கள் சொந்த நாட்டைப் பற்றி அறிந்துக் கொள்ளவும் பொதுமக்கள் மாணவர்கள் சுற்றுலாத் துறையின் பங்குதாரர்கள் ஆகியோர் சுற்றுலாத் துறை பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கும் "தேகோ அப்னா தேஷ்" (உங்கள் தேசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்) என்னும் தலைப்பில் இணையக் கருத்தரங்கு வரிசையை மத்திய அரசின் சுற்றுலாத் துறை நடத்துகிறது

கொல்கத்தா வாக்ஸ்‍‍ டுடே அமைப்பைச் சேர்ந்த திரு. இஃப்தேகர் அஸன், திரு. ரித்விக் கோஷ் மற்றும் திரு. அநிர்பன் தத்தா ஆகியோரால், 'கொல்கத்தாகலாச்சரங்களின் கலவை என்ற இந்த இரண்டாவது வரிசையின் இணையக் கருத்தரங்கு இன்று நடத்தப்பட்டது. கொல்கத்தாவைப் பற்றிய இந்த இணையக் கருத்தரங்கு, கொல்கத்தாவின் வளர்ச்சியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் எவ்வாறு பங்களித்தனர் என்பது குறித்தசுவாரசியமான தகவல்களை அளித்தது.

2700 பதிவுகளுடனுடம், 1800 பேரின் பங்கேற்புடனுடம் இந்த இணையக் கருத்தரங்கு நல்ல வரவேற்பை பெற்றது.

உலக பாரம்பரிய நாளான ஏப்ரல் 18 ம் தேதியை முன்னிட்டு, இரண்டு இணையக் கருத்தரங்குகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணியிலிருந்நு இருந்து மதியம் 12 மணி வரை முதல் அமர்வு, 'மாமல்லபுரத்தின் நினைவுச் சின்னங்கள் ‍– கல்லிலே வடிக்கப்பட்ட கதைகள்' என்னும் தலைப்பில் வழங்கப்படும். அகா கான் கலாச்சார அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி, திரு. ரதிஷ் நந்தா வழங்கும் இரண்டாம் அமர்வு மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரையில் நடைபெறும். 'உலக பாரம்பரியம் மற்றும் நிலையான சுற்றுலா ஹுமாயுனின் கல்லறை வரை  என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ளது..

**


(रिलीज़ आईडी: 1615110) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada