சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய 50,000 முகக்கவசங்களை தில்லி சுழற்சங்கம் வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 17 APR 2020 6:02PM by PIB Chennai

தற்போதைய கொவிட்-19 நெருக்கடி நிலையைச் சமாளிக்க, நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கு இணங்க, தில்லி சுழற்சங்கம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுமார் 50,000 முகக்கவசங்களை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் விரிவான முறையில் விநியோகிப்பதற்காக வழங்கியுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில், வீடுகளில் இருந்தவாறு வேலை செய்யும் தையற்கலைஞர்களால் இந்த முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த முகக்கவசங்கள் தில்லி சுழற்சங்கத்தின் சார்பில், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. ராஜீவ் ஜெயினின் முழுமையான ஒருங்கிணைப்பு முயற்சியின் பயனாக, முதன்மைத் தலைமை இயக்குநர் திரு. குல்தீப் சிங் தட்வாலியாவால் விநியோகிக்கப்பட்டது.

தேசிய ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த முகக் கவசங்கள் இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு. அனந்த் குமார், பத்திரிகையாளர் சங்கப் பொதுச் செயலாளர் திரு. சி.கே.நாயக், இந்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை துணைக் கட்டளை அதிகாரி திரு. சந்தீப் மன்ஹாஸ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.


(रिलीज़ आईडी: 1615446) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada